பட்டாசு வெடித்த சிறுவர்களை தாக்கிய தொழிலாளி கைது
கெங்கவல்லி, அக்.23: தீபாவளி பண்டிகை கடந்த 20ம் தேதி கொண்டாடப்பட்டது. ஆத்தூர் அருகே ஆதிதிராவிடர் தெருவில் வசிப்பவர் அழகேசன் (50). தீபாவளி அன்று, அவர் குடியிருக்கும் வீட்டின் அருகே, 3 சிறுவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்பொழுது எதிர்பாராத விதமாக, பட்டாசு அழகேசன் மீது பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர், 3 சிறுவர்களையும் தாக்கினார். இதை தட்டிக் கேட்ட அவர்களது பெற்றோர்களையும் அவர் தாக்கினார். இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், ஆத்தூர் ஊரக இன்ஸ்பெக்டர் பூர்ணிமா, வழக்கு பதிவு செய்தார். பின்னர், சிறுவர்களை தாக்கிய அழகேசனை கைது செய்து, ஆத்தூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Advertisement
Advertisement