தாய், மகளுடன் இளம்பெண் மாயம்
சேலம், அக்.23: சேலம் நரசோதிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி தனலட்சுமி (27). இவர்களுக்கு ரக்ஷிதா (7) என்ற மகள் உள்ளார். இவர்கள் கடந்த 8 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுடன் தனலட்சுமியின் தாய் குட்டியம்மாவும் வசித்து வருகிறார். இந்நிலையில் தனலட்சுமி உறவுக்காரர் ஒருவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதுதொடர்பாக கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் கடந்த 4ம் தேதியும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அன்றையதினம் தனது தாய் மற்றும் மகளுடன் திருப்பதி செல்வதாக கூறிவிட்டு தனலட்சுமி வீட்டில் இருந்து வெளியேறினார். ஆனால் அதன் பின்னர் அவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர்கள் 3 பேரையும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுபற்றி சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனலட்சுமி, குட்டியம்மா மற்றும் ரக்ஷிதா ஆகியோரை தேடி வருகின்றனர்.