உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
இளம்பிள்ளை, ஆக.23: இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட 3 மற்றும் 4வது வார்டு பகுதிக்கான பரமகவுண்டனூரில் உள்ள தனியார் மண்டபத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று சங்ககிரி ஆர்டிஓ லோகநாயகி தலைமையில் நடைபெற்றது. இதில் நகராட்சி கமிஷனர் பவித்ரா, நகர்மன்ற தலைவர் கமலக்கண்ணன், நகர செயலாளர் செல்வம், நகர்மன்ற துணைத் தலைவர் தளபதி மற்றும் வருவாய்த்துறை, சுகாதாரம், மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் இ.மேட்டுக்காடு, பரமகண்டனூர், வெள்ளபிள்ளையார் கோயில், ரெட்டியூர், கொசவபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு 391 மனுக்களை வழங்கினர். இதில் மகளிர் உரிமைத்தொகை கோரி 137 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement