சாலையோர பள்ளத்தில் கார் சிக்கியதால் குட்கா, ஹான்ஸ் கடத்தி வந்த கும்பல் தப்பியோட்டம்
சேலம், செப்.22: சேலம் வீராணம் அருகே குப்பனூர் சாலையோரம், பள்ளத்தில் நேற்று அதிகாலை ஒரு சொகுசு கார் கேட்பாரற்று கிடந்தது. அப்போது அந்த வழியாக சென்ற வீராணம் ரோந்து போலீசார், பள்ளத்தில் கிடந்த காரை பார்த்தனர். உடனே அங்கு காரை சோதனை செய்தனர். அதில் தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் மூட்டை, மூட்டையாக இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த தடைசெய்யப்பட்ட ஹான்சை, பெங்களூரில் இருந்து கடத்திய வந்த கும்பல், பள்ளத்தில் கார் இறங்கியதால், அந்த காரை அங்கேயே விட்டு விட்டு கும்பல் தப்பி சென்று விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து போலீசார், காரை வீராணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றனர். ஹான்ஸ் கடத்தி வந்த கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கார் உத்திரபிரதேசம் பதிவெண் கொண்டதாகவும், காரில் கடத்திய வந்த 400கிலோ ஹான்சை பல இடங்களுக்கு சப்ளை செய்ய வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் சிசிடிவி கேமராவை பார்த்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.