முரசொலி மாறன், வீரபாண்டி ஆறுமுகம் நினைவு தினத்தில் மவுன ஊர்வலம்
வாழப்பாடி, நவ.21: சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவுநாளான வரும் 23ம் தேதி பூலாவரியில் மவுன ஊர்வலம் நடக்கிறது. சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் வேளாண்துறை அமைச்சருமான மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் 13ம் ஆண்டு நினைவுநாள் வரும் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு பூலாவரி கிளைக்கழக அலுவலகத்தில் இருந்து எனது தலைமையில் மவுன ஊர்வலம் புறப்பட்டு, வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவிடத்தை அடைந்து, அங்கே மலரஞ்சலி செலுத்தப்படுகிறது.இந்நேரத்தில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞரின் மனசாட்சியுமான முரசொலி மாறனின் நினைவு தினத்தையொட்டி அன்றைய தினம் அவரது உருவப்படத்திற்கும் பூலாவரி திமுக அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.