கெங்கவல்லியில் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
கெங்கவல்லி, ஆக. 21: கெங்கவல்லி அடுத்த ஆணையம்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ரஞ்சித்(22). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகள் சந்தியா(19), இவர் 12ம் வகுப்பு படித்துள்ளார். ரஞ்சித், சந்தியா இருவரும் காதலித்து வந்தனர். இது சந்தியா வீட்டுக்கு தெரியவரவே, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருவரும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி, நேற்று பேளூர் ஈஸ்வரன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். எஸ்ஐ கணேஷ்குமார், இருதரப்பு பெற்றோரை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சந்தியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு, ரஞ்சித்துடன் சந்தியாவை போலீசார் அனுப்பி வைத்தனர்.
Advertisement
Advertisement