ஆத்தூர் அருகே வடமாநில வாலிபர் மர்மச்சாவு
நரசிங்கபுரம், ஆக. 21: ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தில் இருந்து புங்கவாடி செல்லும் சாலையில் சமுதாயக்கூடம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை ,சமுதாய கூடத்தின் முன்பு, சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து மஞ்சினி கிராம நிர்வாக அலுவலர் சரவணன், ஆத்தூர் ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement