விஷ வண்டுகள் கொட்டியதில் 5 பேர் காயம்
கெங்கவல்லி, ஆக.19: கூடமலை ஊராட்சி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விவசாயி ராஜசேகர். இவரது விவசாய தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது. நேற்று காலை விவசாய பணிக்கு வந்த 5க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை, வண்டுகள் துரத்தி கொட்டியது. காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து ராஜசேகர், கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் (பொ) சேகர் மற்றும் வீரர்கள், சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தென்ைன மரத்தில் இருந்து விஷ வண்டுகள் மற்றும் கூண்டை அழித்தனர்.