தொலைந்த செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு
கெங்கவல்லி, ஆக.19: கெங்கவல்லியை சேர்ந்தவர் கருப்புசாமி மகன் மணிகண்டன்(38). இவர் பொக்லைன் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பொக்லைன் வாகனத்தை ஆபரேட் செய்த போது, அவரது செல்போன் தொலைந்து போனது. இதுகுறித்து மணிகண்டன் கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்ஐ கணேஷ்குமார் விசாரணை நடத்தி, வாழப்பாடியில் செல்போன் இருப்பதை கண்டுபிடித்து மீட்டு மணிகண்டனிடம் ஒப்டைத்தார்.