ரூ.30 லட்சத்தில் சமுதாய கூடம்
நரசிங்கபுரம், ஆக.19: தலைவாசல் வட்டம், மணிவிழுந்தான் ஊராட்சியில் பண்டித அயோத்தி தாசர் திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது. இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன், மாவட்ட துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை கலந்து கொண்டு பூமி பூஜை செய்து, சமுதாயக் கூடம் கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். இதில் மத்திய ஒன்றிய செயலாளர் மணி (எ) பழனிசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன், ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணன், சிறுவாச்சூர் கணேசன், செந்தில், பிரியங்கா, ரஞ்சித், வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.