வடமாநில வாலிபர் போக்சோவில் கைது
சங்ககிரி, நவ.18: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த 15வயது சிறுமி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை, வீட்டில் இருந்து மாரியம்மன் கோயிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். அப்போது, உத்தரப்பிரதேச மாநிலம் கமல்பூரை சேர்ந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யும் தொழிலாளி விஷ்ணுகுமார்(22) என்பவர், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் அழுது கொண்டே கூறியுள்ளார். இதையடுத்து சங்ககிரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) தனலட்சுமி, எஸ்ஐ மல்லிகா ஆகியோர், விஷ்ணுகுமார் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவரை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.