நரசிங்கபுரத்தில் இருதரப்பு தகராறில் 6 பேர் மீது வழக்கு
நரசிங்கபுரம், செப்.17: நரசிங்கபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தங்கமீன் (38). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தேவகி என்பவருக்கும், வீட்டை காலி செய்வது தொடர்பாக கடந்த ஒரு வருடமாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் ஆத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் இருதரப்பிலும் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Advertisement
Advertisement