விஷ வண்டுகள் கடித்து 2 பேர் காயம்
கெங்கவல்லி, அக்.16: கெங்கவல்லி அருகே, நரிப்பாடி பகுதியில் வசித்து வருபவர் ராஜசேகரன் விவசாயி. இவரது தோட்டத்தில், ஏராளமான மரங்கள் உள்ளது. இங்குள்ள ஒரு மரத்தில் விஷ கதண்டு வண்டுகள் கூடுகட்டி இருந்து வந்துள்ளன. நேற்று, விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு வந்த கூலித் தொழிலாளர்கள் இருவரை விஷ கதண்டு கொட்டியது. இதில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில், வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்து விஷ கதண்டு வண்டுகளை அழித்தனர்.
Advertisement
Advertisement