உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
வாழப்பாடி, அக்.16: பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி, கருமந்துறையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம், தாசில்தார் ஜெயக்குமார், சப்கலெக்டர், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சிவராமன், மத்திய ஒன்றிய செயலாளர் மூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பு (எ) தங்கமருதமுத்து, செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மனோகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்துலிங்கம், தமிழ்நாடு பழங்குடியின நல வாரிய உறுப்பினர் தாடி வெங்கடேஷ் முகாமினை துவக்கி வைத்தனர்.முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக 266 மனுக்களும், வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 132 மனுக்களும், மின்சார வாரியத் துறையின் மூலம் 5 மனுக்களும், என 662 மனுக்கள் பெறப்பட்டன.இதற்கு உடனடியாக 45 நாட்கள் உடைய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி, அலுவலர் தாசில்தார் உறுதி அளித்துள்ளனர்.