25 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்
நரசிங்கபுரம், ஆக.15:ஆத்தூர் நகராட்சி பகுதியில், புதுப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்பதாக நகராட்சி ஆணையாளருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், நேற்று புதிய பேருந்து நிலையம் புதுப்பேட்டை பகுதியில் கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கடைகளில் 25 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக், டீ கப் போன்றவை கைப்பற்றினர். அந்தக் கடைகளுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின் போது, ஆத்தூர் சுகாதார ஆய்வாளர் குமார், சுரேஷ், மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.