வீடு தேடி ரேஷன் பொருள் விநியோகம்
மல்லூர், ஆக.15: பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் கம்மாளப்பட்டி, திப்பம்பட்டி, குரால்நத்தம், பனமரத்துப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் வக்கீல் பாரப்பட்டி சுரேஷ்குமார் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் உமாசங்கர், நகர செயலாளர் ரவிக்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் பிரபு கண்ணன், பேரூராட்சி தலைவி பரமேஸ்வரி வரதராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.