கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி
வாழப்பாடி, அக்.14: வாழப்பாடி- மங்களபுரம் சாலையோரம் பல்வேறு இடங்களில் தரைமட்ட விவசாய கிணறுகள் உள்ளன. நேற்று முன்தினம், அந்த வழியாக பைக்கில் சென்ற வாலிபர், பொன்னாரம்பட்டி பரவக்காடு பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். அங்கிருந்த பாறைகள் மீது தலை மோதியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், வாழப்பாடி போலீசார் சம்பவ இடம் விரைந்து விசாரித்தனர். கிணற்றுக்குள் கிடந்த வண்டி நம்பரை வைத்து விசாரித்ததில், தவறி விழுந்தவர் வாழப்பாடி அருகே சேசன்சாவடி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகன் மாதையன்(27) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Advertisement
Advertisement