கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம்
சேலம், ஆக.14: ஆடிப்பெருவிழாவையொட்டி சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் கணபதி ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேகவிழா நடந்தது. சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் கடந்த 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடிப்பெருவிழா தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல், மாவிளக்கு வைபவம் கடந்த 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடந்தது. இக்கோயிலில் முதன் முறையாக கடந்த 8ம் தேதி வெகு விமர்சையாக தேரோட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து 11ம் தேதி சத்தாபரணம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிலையில் ஆடிப்பெருவிழாவில் நேற்று காலை அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு மகா நைவேத்யம் நடந்தது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை, கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம், கொடியிறக்கம், அன்னதானம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.