1230 மூட்டைபருத்தி ரூ.35.25 லட்சத்திற்கு ஏலம்
இடைப்பாடி, ஆக.14: கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்க உபகிளையான கோனேரிப்பட்டி கூட்டுறவு சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்திற்கு பூலாம்பட்டி, நெடுங்குளம், காட்டூர், கோனேரிப்பட்டி, பூமணியூர், கல்வடங்கம், தண்ணீர் தாசனூர், மூலப்பாதை, வெள்ளரி வெள்ளி, சித்தூர், ஆடையூர், பக்கநாடு, இருப்பாளி, நெரிஞ்சிப்பேட்டை, காவேரிப்பட்டி, கோனேரிப்பட்டி அக்ரகாரம், வெள்ளாளபாளையம், அரசிராமணி, தேவூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் என 1230 மூட்டை பருத்தியை கொண்டு வந்தனர். இதில் ரூ.35.25 லட்சத்திற்கு ஏலம் போனது. பிடி ரகம் குவிண்டால் ரூ.7,099 முதல் ரூ.7989 வரை விற்பனையானது.