மோசடி வழக்கில் ஆஜராகாமல் இருந்த வாலிபர்
Advertisement
கைதுசேலம், அக்.13: சேலம் அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்தவர் ராமநாதன். இவரிடம் கடந்த 2008ம் ஆண்டு ரூ.3 லட்சத்தை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில், ராமநாதபுரம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த பூமுருகனை(41) அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த இவர், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து இவரை பிடிக்க கோர்ட்டு பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில், அன்னதானப்பட்டி போலீசார், ராமநாதபுரத்தில் பதுங்கி இருந்த பூமருகனை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
Advertisement