கெங்கவல்லியில் இமானுவேல் சேகரன் படத்திற்கு மரியாதை
கெங்கவல்லி, செப்.12: கெங்கவல்லியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரது படத்திற்கு முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட துணை செயலாளருமான சின்னதுரை, நகர செயலாளர் பாலமுருகன் தலைமையில், தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல், விசிக மாவட்ட செயலாளர் கருப்பையா, அதிமுக நகர செயலாளர் இளவரசு, பாமக மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் இமானுவேல் சேகரன் படத்திற்கு மாலை அணிவித்தனர்.
Advertisement
Advertisement