பெரியார் பல்கலை.யில் செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம்
ஓமலூர், செப்.12: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக மானிய குழுவின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் மகளிரியல் மையத்தில் ஆராய்ச்சி எழுத்து, தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு காலத்தில் நெறிப்படுத்தப்பட்ட வெளியீடு சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மகளிரியல் மைய இயக்குநரும், அமைப்பு செயலாளருமான பேராசிரியர் நாஸ்னி தலைமை வகித்தார். துணைவேந்தர் நிர்வாக குழு உறுப்பினர் ஜெயந்தி விளக்கி பேசினார். ஆஸ்திரேலியா நியூ சவூத் வேல்ஸ் பல்கலைக்கழக மூத்த ஆராய்ச்சியாளர் அன்புபலம் தாளமுத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விஞ்ஞானி விருது பெற்றவரும், கல்லூரி கல்வி இயக்கக முன்னாள் இணை இயக்குநருமான ராவணன், புள்ளி விவர கருவிகள் மற்றும் அவற்றின் ஆராய்ச்சி பயன்பாடு குறித்து விளக்கி பேசினார். மகளிர் ஆய்வு மைய துணை இயக்குனர் ராதிகா நன்றி கூறினார்.