கள்ளச்சாராயம் விற்றவர் கைது
ஓமலூர், செப்.11: ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி காவல் நிலைய எல்லையில், சாராயம் காய்ச்சி விற்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், இன்ஸ்பெக்டர் மெடில்லா ஜோசி, தலைமை காவலர்கள் தர்மலிங்கம், உதயகுமார், சந்திரா, பழனியம்மாள் ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இதில், மூக்கனூர் கிராமத்தில் சாராயம் காய்ச்சி விற்றதாக தொட்டியனூரைச் சேர்ந்து ஜெயபால்(50) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement