கணவனை பிரிந்த இளம்பெண் மாயம்
தாரமங்கலம், செப்.11: தாரமங்கலம் அருகே கருக்கல்வாடி கிராமம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு மகள் தமிழ்ச்செல்வி(22). இவருக்கும், இடைப்பாடி அருகே வேம்பநேரி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு, திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விட்டு பிரிந்து வந்து, தனது பெற்றோருடன் தமிழ்ச்செல்வி தங்கியிருந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, உறவினர்களை பார்ப்பதற்காக கோனேரிவளவு கிராமத்திற்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால், அங்கு போய் சேரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்துள்ளார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து, காணாமல் போன தமிழ்ச்செல்வியை தேடி வருகின்றனர்.
Advertisement
Advertisement