முதலாமாண்டு வகுப்புகள் துவக்கவிழா
ஓமலூர், அக்.9: சேலம் பத்மவாணி, கே.எஸ்.கல்வியியல் கல்லூரிகளின் பி.எட் முதலாமாண்டு பாட வகுப்புகள் துவக்கவிழா நடைபெற்றது. பத்மவாணி மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முத்துக்குமார் வரவேற்றார்.
பத்மவாணி கல்வி நிறுவனங்களின் இயக்குநர் இசைவாணி சத்தியமூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். செயலாளர் துரைசாமி முன்னிலை வகித்தார். தாளாளர் சத்தியமூர்த்தி தலைமை உரையாற்றினார். இதில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக முன்னாள் இயக்குநர் மற்றும் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் மணிவண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர் பணியின் சிறப்புகள், போட்டிதேர்வு, ஆசிரியர் பணி வாய்ப்புகள், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், ஆசிரியருக்கான உளவியல் தேவை குறித்து பேசினார். இதில், 2ம் ஆண்டு மாணவிகள் முதலாமாண்டு மாணவிகளுக்கு இனிப்புகள், மலர்கள் கொடுத்து வரவேற்றனர். விழாவில் மாணவிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கே.எஸ்.கல்வியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் நன்றி கூறினார்.