கலைஞர் நினைவுநாள் அனுசரிப்பு
சேலம், ஆக.8: சேலம் எம்.டி.எஸ். நகரில் கலைஞர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. சேலம் எம்.டி.எஸ். நகரில் அலங்கரித்து வைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் படத்திற்கு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச்செயலாளரான முன்னாள் எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் கலைஞர் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வக்கீல் எஸ்.ஆர்.அண்ணாமலை, பனமரத்துப்பட்டி ராஜா, மாநகராட்சி கவுன்சிலர் ஜெயகுமார், வக்கீல் லட்சுமணபெருமாள், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ராஜ்குமார், நிர்வாகிகள் பெத்தாய் கோபால், ஆட்டோ பிரபு, வெங்கடேசன், தங்கராஜ், நாகராஜ், சரத், முருகன், அசோக், ராஜா, ராஜேஷ், சண்முகவேல், வடிவேல், முத்துகுமார், கார்த்தி, பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.