நீர்நிலை புறம்போக்கில் மரங்கள் வெட்டி கடத்தல்
Advertisement
கெங்கவல்லி, நவ.7: கெங்கவல்லி பேரூராட்சி, 2வது வார்டு ஆறுமுகம் காலனி பகுதியில், அரசு நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்நிலத்தில் வேப்பம், வாகை மற்றும் புங்கமரங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் வேப்பம், வாகை மற்றும் புங்கமரங்களை வெட்டியதுடன், இரவோடு இரவாக கடத்தி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன், பொதுமக்கள் சார்பில் நடவடிக்கை எடுக்கக்கோரி தாசில்தார் நாகலட்சுமிடம் புகார் மனு அளித்தார்.
Advertisement