கெங்கவல்லி தாலுகாவில் பட்டாசு கடை உரிமம் வழங்க ஆர்டிஓ நேரில் ஆய்வு
கெங்கவல்லி, அக்.7: அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, கெங்கவல்லி தாலுகாவில் கெங்கவல்லி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, உலிபுரம், நாகியம்பட்டி, கூடமலை உள்ளிட்ட ஊர்களில் தற்காலிக பட்டாசு கடை வைப்பதற்கு 20க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், பட்டாசு கடை வைப்பதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்த கடைகளில் ஆத்தூர் ஆர்டிஓ தமிழ்மணி நேற்று ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது கெங்கவல்லி தாசில்தார் நாகலட்சுமி, வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வன் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
Advertisement
Advertisement