காவல் நிலையங்களில் நுழைவு வாயில் மூடல்
மேட்டூர், ஆக.7: கருமலைக்கூடல், மேச்சேரி காவல் நிலையங்களில் ஒரு நுழைவு வாயில் மூடப்பட்டது. கோயம்புத்தூரில் உள்ள கடைவீதி காவல் நிலையத்திற்குள் புகுந்து ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் இரண்டு நுழைவு வாயில் உள்ள காவல் நிலையங்களில், ஒரு வாயிலாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மேச்சேரி மற்றும் கருமலைக்கூடல் காவல் நிலையங்களில் ஒரு நுழைவு வாயில் மூடி பூட்டு போடப்பட்டது.