அரசு பள்ளியில் சிஇஓ ஆய்வு
கெங்கவல்லி, ஆக.6: கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் ஆய்வு மேற்கொண்டார். காலை சரியான நேரத்திற்க மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்களா, ஆசிரியர்கள் சரியான முறையில் பாடம் எடுக்கிறார்களா, பள்ளியில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும், குடிநீர் வசதி குறித்தும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டார். ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் நரசிம்மன், தலைமையாசிரியர்சாமுவேல் ஆகியோர் உடனிருந்தனர்.