கிங்டம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு
நரசிங்கபுரம், ஆக.6: ஆத்தூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தியேட்டரில் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் என்ற திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கில் இருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இந்த படத்தில், தமிழர்களுக்கு எதிராக காட்சிகள் உள்ளதாக கூறி நாதகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நகர செயலாளர் சக்தி உள்ளிட்டோர் நேற்று தியேட்டருக்கு சென்று முற்றுகையிட்டனர். இதனால், மதிய காட்சி ரத்து செய்யப்பட்டது. மீண்டும் மாலையிலும் சென்று டிக்கெட் கொடுக்கக் கூடாது. படம் ஓட்டக்கூடாது என கூறியதால் தியேட்டருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் நேற்று தியேட்டர்களில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.