தடுப்பணை கட்டும் பணி தொடக்கம்
வாழப்பாடி, ஆக.6: சேலம் கிழக்கு மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தலையாய்பட்டி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவா உறுதித் திட்டத்தின் கீழ், தடுப்பணை கட்டும் பணிக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, பூமி பூஜையுடன் கட்டுமான பணி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் அன்பு(எ) தங்கமருதமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியம், கிளை செயலாளர்கள் அறிவழகன், சிவராமன், கோவிந்தராஜ், குருநாதன், வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.