ராணுவ வீரர் மனைவியின் செல்போன், பணம் திருட்டு
சேலம், நவ.5: சேலம் கருப்பூர் அருகே ராணுவ வீரரின் மனைவியின் செல்போன், பணத்தை திருடிச்சென்ற 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் கருப்பூர் பக்கமுள்ள ஆணைகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்(30). ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் ஊர் வந்துள்ளார். கடந்த 24ம்தேதி அவரது மனைவி டூவீலரில் ஜாகீர்அம்மாப்பாளையத்தில் இருந்து ஆணைகவுண்டம்பட்டில் உள்ள வீட்டிற்கு வந்தார். டூவீலரை நிறுத்திவிட்டு, விலைஉயர்ந்த செல்போன், ரூ25 ஆயிரத்தை பர்சில் வைத்து வண்டியில் வைத்துவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பர்சை காணவில்லை. இதுகுறித்து கருப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் செல்போன், பணத்தை திருடியதாக பண்ணப்பட்டியை சேர்ந்த முருகன்(26), கஞ்சநாயக்கன்பட்டியை ேசர்ந்த கமலேஷ்(23) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து செல்போனை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.