ரூ.1.25 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள்
தாரமங்கலம், டிச.4: தாரமங்கலம் நகராட்சி, 20வது வார்டு சக்கரை விநாயகர் கோயில் அருகில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், 15வது மானிய குழு நிதி மூலம் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், கிழக்கு பாவடி நகராட்சி பள்ளி வளாகத்தில் பள்ளி மேம்பாட்டு மானிய திட்டத்தின் கீழ் ரூ.16.5 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம், அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.65 லட்சத்தில் பொது சுகாதார மையம் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். நகர துணை செயலாளர் செல்வமணி, பொருளாளர் சேகரன், மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் ரகுபதி, ஈஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அர்த்தநாரி, வட்டார மருத்துவ அலுவலர் பிரதீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement