அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
கெங்கவல்லி, நவ.1: ஆத்தூர் ஒன்றியத்தில், அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றியம் ராமநாயக்கன்பாளையத்தில், அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்து ஆலோசனை வழங்கி பேசினார். ஆத்தூர் ஜெயசந்திரன் எம்எல்ஏ, கிழக்கு ஒன்றிய செயலாளர் சேகர், சேலம் மண்டல துணை தலைவர் சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் லலிதா சரவணன், ராஜராஜ சோழன், குழந்தைவேல், பெரியசாமி, பழனிசாமி, ரமேஷ், மலைய பெருமாள், தமிழ்ச்செல்வன் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள், சார்பு அணியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement