ரூ.78.20 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்
மேட்டூர், அக்.26: குட்டப்பட்டியில் ரூ.78.20 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை டி.எம்.செல்வகணபதி எம்பி தொடங்கி வைத்தார்.மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், குட்டப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டிடம் வேண்டி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து தேசிய சுகாதார இயக்கம் மற்றும் 15வது மத்திய நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.78.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 15 படுக்கை வசதி, ஆய்வக அறை, மருந்தகம், கணினி அறை, பிரசவ அறை, வெளி மருத்துவ பயனாளிகள் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிட பணிகளை டி.எம்.செல்வகணபதி எம்பி நேற்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவ அலுவலர் ரவித்தா, சேலம் மேற்கு மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், ஒன்றிய செயலாளர்கள் சீனிவாச பெருமாள், அர்த்தனாரி ஈஸ்வரன், மேச்சேரி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் காசி விஸ்வநாதன், மேச்சேரி நகர செயலாளர் சரவணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.