திமுக பாக முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம்
வாழப்பாடி, ஆக.18: சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்பி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள், பிஎல் ஏ 2, கிளைச் செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்நடைபெறுகிறது. இதில் சேலம் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, மற்றும் வீரபாண்டி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பாகமுகவர்கள் (பிஎல்ஊ 2), கிளை செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் வருகின்ற 22, 23, 24ம் தேதிகளில் எனது தலைமையில் பின்வரும் பட்டியல்படி நடைபெறும்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், கிளை செயலாளர்கள், பாகமுகவர்கள் (பிஎல்ஏ 2) தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். பாகமுகவர்கள் (பிஎல்ஏ 2) அடையாள அட்டை அணிந்து வர வேண்டும். 081 - கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்கு 22ம் தேதி காலை 10 மணி அளவில் நடுவலூர் வசந்த மஹாலில் நடைபெறுகிறது. 082-ஆத்தூர் சட்டமன்ற தொகுதி 23ம் தேதி காலை 10 மணி அளவில் துளுவ வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
091 - வீரபாண்டி சட்டமன்ற தொகுதி 24ம் தேதி காலை 10 மணி அளவில் கிருஷ்ண மஹால், நெய்காரப்பட்டியில் நடைபெறுகிறது. 083- ஏற்காடு சட்டமன்ற தொகுதி 24ம் தேதி மாலை 3 மணி அளவில் வாழப்பாடியில் உள்ள தளபதி மு.க ஸ்டாலின் அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.