இன்ஸ்பெக்டர்கள் நியமனம்
சேலம், ஏப்.23: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செல்வராஜ், இடமாறுதல் செய்யப்பட்டு, சேலம் சரக டிஐஜி அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். அதே போல கோவையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்த இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சேலம் சரக டிஐஜி அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். இவர்கள் இருவருக்கும் போலீஸ் ஸ்டேசன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்ஸ்பெக்டர் செல்வராஜ், கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை ஸ்டேசனுக்கும், இன்ஸ்ெபக்டர் வேல்முருகன், வாழப்பாடி போலீஸ் ஸ்டேசனுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சேலம் சரக டிஐஜி உமா பிறப்பித்துள்ளார்.
Advertisement
Advertisement