சுப்பிரமணியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு
அறந்தாங்கி, ஜூலை 14: அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு புதிய கட்டடம் கட்டுவதற்க்கு தமிழ்நாடு அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன் நன்றி தெரிவித்து உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் சுப்பிரமணியபுரத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு மருத்துவமணையில் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என மொத்தம் 400 பேர் சிகிச்சை பெற்று வருவதால் மருத்துவயணையில் போதுமான இடவசதி இல்லை.
இதனால், இந்த மருத்துவமணைக்கு கூடுதலாக கட்டடம் கட்டி போதுமான மருத்துவர்கள் செவிலியர்களை தமிழ்நாடு அரசு செய்து தரவேண்டும் என சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஏற்கனவே கோரிக்கை வைத்து இருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு சுப்பிரமணியபுரம் கலைஞர் கருணாநிதி அரசு மருத்துவமணையில் புதிய கட்டடம் கட்டுவதற்காக ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யமைக்கு தமிழ்நாடு முதலைமைச்சர் மு. க. ஸ்டாலின் சுகாதாரதுறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட அமைச்சர்களுக்கு அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்து உள்ளார்.