ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க ஒன்றிய மாநாடு
குமாரபாளையம், ஜூலை 23: குமாரபாளையத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க ஒன்றிய மாநாடு, செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராமகிஷ்ணன் கொடியேற்றி மாநாட்டை துவங்கி வைத்தார். பஞ்சாலை சண்முகம் வரவேற்றார். நிர்வாகிகள் அசரப்அலி, தனசேகரன், வக்கீல் முத்துசாமி, செல்வராஜ், சரவணன், பாண்டியன் ஆகியோர் பங்கேற்று பேசினர். ஒன்றிய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களையும், நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். மாவட்டத்தில் வீடில்லாத அனைத்து தொழிலாளர்களுக்கும் வீட்டுமனை வழங்க வேண்டும். மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெற்றுள்ள மகளிர் குழுவினரின் கடனை தள்ளுபடி செய்யவேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு, சட்டப்படியான கூலி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், பள்ளிபாளையம், குமாரபாளையம் அமைப்பின் புதிய நகர நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.