அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
திருப்புவனம், ஜூலை 10: திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி ரவிக்குமார் தலைமையில் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளின் செயலர்கள் மற்றும் அலுவலர்கள், பொறியாளர்கள், ஓவர்சியர் தமிழ்நாடு மின்சார வாரியத்து உதவி இயக்குநர், காவிரி கூட்டு குடிநீர் திட்ட உதவி இயக்குநர், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆகியோரிடம் ஒவ்வொரு ஊராட்சியிலும் உட்கடை கிராமங்களிலும் உள்ள குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு போன்ற குறைகள் குறித்தும், அதனை விரைவில் சரி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உட்பபட பலர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement