தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பந்தலூர் பஜாரில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

ஊட்டி, ஜூலை 7: நீலகிரியில் தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டு மாடுகளால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலானம் வனப்பகுதிகளை ஒட்டியே தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதனால், காட்டு மாடுகள், புலி, சிறுத்தை, கரடி, மான்கள் மற்றும் காட்டு பன்றி போன்ற விலங்குகள் தேயிலை தோட்டங்களுக்குள் வந்து விடுகின்றன. அங்குள்ள பயிர்களை நாசம் செய்வது மட்டுமின்றி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை தோட்டங்களுக்கு செல்லவிடுவதில்லை.

Advertisement

தற்போது, குந்தா வனச்சரகத்திற்குட்பட்ட தேவர்சோலை, தேவபெட்டா, கைகாட்டி, சாம்ராஜ், பெங்கால்மட்டம், மைனலை மட்டம் மற்றும் மெரிலேண்டு போன்ற பகுதிகளில் நாள் தோறும் சுமார் 20க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் வந்து விடுகின்றன. இவைகள் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே வளர்ந்துள்ள களைச் செடிகளையும், புற்களையும் உட்க்கொள்ள ஆரம்பித்தால், சுமார் 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை அங்கேயே சுற்றி சுற்றி வருகின்றன.

இதனால், அந்த தேயிலை தோட்டங்களுக்குள் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை விரட்டுவதால், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, இந்த காட்டு மாடுகள் தேயிலை தோட்டங்களுக்குள் வராமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement