கொல்லி வயல் சாலையை சீரமைக்க கோரிக்கை
கூடலூர், ஜூலை 23: கூடலூர் கள்ளிக்கோட்டை சாலையில் பிரிந்து கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர், கொல்லி வயல், ஆனை செத்த கொல்லி வழியாக கூடலூர் தேவர்சோலை சாலை முதல் மைல் பகுதியை இணைக்கும் சாலை உரிய பராமரிப்பு இன்றி பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில், இந்த சாலையை ஏராளமான பொதுமக்கள், பழங்குடியின மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆட்டோ, கார்கள் மற்றும் சிறிய ரக சரக்கு வாகனங்களும் இயக்கப்படுகின்றன. சாலை உரிய பராமரிப்பு இல்லாததால் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சாலை மேலும் சேதமடையும் நிலை உள்ளது. இந்த சாலையை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.