உபரிநீர் பயன்பாட்டிற்கு சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைத்து தர கோரிக்கை
கரூர், மே 30: கரூர் மாநகராட்சி பகுதிகளில் செயல்பாடற்ற நிலையில் உள்ள சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டு பகுதிகளிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதில், சில பகுதிகளில் உள்ள டேங்க்குகள் மோட்டார் பழுது போன்ற பல்வேறு காரணங்களால் செயல்படாமல் உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியினர் உபரி நீர் பயன்பாட்டிற்கு தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
Advertisement
எனவே, இதுபோல பயனற்ற நிலையில் உள்ள டேங்க்குகளை சீரமைக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு டேங்க்குகளை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Advertisement