அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள முள்செடிகளை அகற்ற கோரிக்கை
கரூர், ஜூலை 9: கரூர் அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள சீத்த முட்செடிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகர் வழியாக அமராவதி ஆறு செல்கிறது. இந்த ஆறு திருமுக்கூடலூர் வரை சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில் இந்த அமராவதி ஆற்றில் அதிகளவு சீத்த முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக தண்ணீர் எளிதாக முன்னேறிச் செல்ல முடியாத நிலை உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள செடி கொடிகள அனைத்தும் அகற்றப்பட்டன. அதனைத்தொடர்ந்து கண்டுகொள்ளாமல் விட்டதால் அமராவதி ஆற்றில் மீண்டும் அதிகளவு சீத்த முட்செடிகள் வளர்ந்துள்ளன. எனவே, இதனை கட்டுப்படுத்தும வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூடுதலாக கவனம் செலுத்தி ஆற்றில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.