தார்ச்சாலை அமைக்க கோரிக்கை
வருசநாடு, ஜூன் 6: வருசநாடு அருகே முருக்கோடை கிராமத்தில் வாழவந்தாள்புரம் கிராமம் செல்லும் தார்ச்சாலை பணிகள் கடந்த சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் சாலைகள் மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கிடப்பில் போட்ட சாலையால் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வந்தது. இதனையடுத்து கிராமங்களுக்கு புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Advertisement
Advertisement