திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திண்டுக்கல், ஆக. 2: திண்டுக்கல் மாநகராட்சிட்பட்ட பழநி ரோடு, கணபதி அக்ரஹாரம், தெரு சந்திப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இதனருகே பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட ஓட்டல் மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட், பிளக்ஸ் பேனர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர்.
Advertisement
இதையடுத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் நேற்று மாநகர் செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தலைமையில் மாநகர திட்டமிடுநர் ஜெயக்குமார், ஆகியோர் கொண்ட குழுவினர் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த ஓட்டல் மற்றும் ப்ளக்ஸ் பேனர்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து கணபதி அக்ரஹாரம் சந்திப்பில் ஆட்டோ ஸ்டாண்ட் பலகையை அகற்றினர்.
Advertisement