மத நல்லிணக்க கந்தூரி விழா
திண்டுக்கல், ஜூன் 7: மொகரம் திருநாளை முன்னிட்டு, திண்டுக்கல்லில் மத நல்லிணக்க கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 5000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மொகரம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பள்ளிவாசல் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பல் மத நல்லிணக்க கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் 500 கிலோ அரிசி, 300 கிலோ கத்தரிக்காய், 100 கிலோ தக்காளி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உணவு சமைக்கப்பட்டது.
பின்னர் அது பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் ரவுண்ட் ரோடு புதூர், அனுமந்த நகர், பாலகிருஷ்ணாபுரம், மாசிலாமணிபுரம், நாகல் நகர், வேடப்பட்டி, குள்ளளம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் சமூக வேறுபாடின்றி கலந்து கொண்டனர். அவர்களுக்கு விழாக்குழுவினர் இன்முகத்துடன் உணவு வழங்கினர்.