பெண்ணை தாக்கிய உறவினர் கைது
நெல்லை, ஜூன் 20: நெல்லை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே பெண்ணை தாக்கி மிரட்டல் விடுத்த உறவினரை போலீசார் கைது செய்தனர். நெல்லை அடுத்த முன்னீர்பள்ளம் அருகேயுள்ள அடைமிதிப்பான்குளம் வேதகோயில் தெருவைச் சேர்ந்தவர் புஷ்பம் (50). இவர், உறவினரான அதே ஊரைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற ராஜ் (46) என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரூ.4 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16ம்தேதி புஷ்பம், ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், புஷ்பத்தை தாக்கி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அவர், முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் எஸ்ஐ எட்வின் அருள்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி ராஜ்குமார் என்ற ராஜை கைது செய்தனர்.