ரங்கனூர் பள்ளி மாணவர்கள் முதலிடம்
போச்சம்பள்ளி, ஜூலை 9: சரக அளவிலான எறிபந்து போட்டியில் முதலிடம் பிடித்த ரங்கனூர் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் கெரிகேப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சரக அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், போச்சம்பள்ளி அருகே ரங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் எறிபந்து போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்துள்ளனர். ஆண்கள் பிரிவில் 12 பேரும், பெண்கள் பிரிவில் 12 பேரும் கலந்து கொண்ட நிலையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.